திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்

தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

நாடிஜோதிடம் துவங்கிய கோவில்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 

1. சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை (24.02.2022)

https://www.alayathuligal.com/blog/jgrjlakbwngmmac5llbatklc6kf9sy?rq

 

2. கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர் (23.02.2022)

https://www.alayathuligal.com/blog/s466acf59zxyfk58c9rf79ga2cddf2?rq

 

3. கடுக்காய் பிள்ளையார் (21.03.2022)

https://www.alayathuligal.com/blog/a49sn8ty3g4k9jhjw7pjh32jyc2trh?rq

 

4. இழந்த பொருள்களை மீட்டுத் தரும் சொர்ணாகர்ஷண கால பைரவர் (03.04.2022)

https://www.alayathuligal.com/blog/yrez4al4yjay5ahm38yflepjlbnmmg?rq

 

ஞான தட்சிணாமூர்த்தி எதிரில் அகத்தியர்

 
Previous
Previous

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்

Next
Next

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்