சிவபெருமான்

இந்து சமயம் பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களைப்  பிரதானமாகப போற்றுகின்றது.இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திற்கு,  சிவபெருமான் முதன்மையான கடவுளாக விளங்குகின்றார். சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்,இவரை பரமசிவன் என அழைக்கின்றனர்.சிவபெருமான் உருவம்,அருவம்(உருவம் இல்லாத நிலை), அருவுருவம்(உருவமும் அருவமும் கலந்த நிலை)  என மூன்று வடிவங்களில் உள்ளார். பொதுவாக சிவ பெருமான் கோயில்களில் அருவுருவமாக, சிவலிங்கத்தின் வடிவத்தில் வணங்கப்படுகிறார்.  சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் பல கோயில்கள் இருக்கின்றன. சிவ பக்தர்கள் பலர் (நாயன்மார்கள்) சிவபெருமானின் பெருமைகளைப் பாடிய பாடல்களின் தொகுப்பே 12 திருமுறைகளாக சைவசமயத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் முதல் மூன்று  திருமுறைகளை திருஞானசம்பந்தரும்,அடுத்த  மூன்று  திருமுறைகளை அப்பரும், ஏழாம் திருமுறையை சுந்தரரும்  பாடியிருக்கிறார்கள்.இந்த மூன்று நாயன்மார்களும் சிவத்தலங்களுக்கு சென்று பாடிய பாடல்கள் தேவாரப் பாடல்கள் எனவும்,இவர்களின் பாடல் பெற்ற தலங்கள் தேவாரத் திருத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.தேவாரத் திருத்தலங்களின்  எண்ணிக்கை மொத்தம் 276 ஆகும்.சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும்,தேவாரத் திருத்தலங்கள்   மற்றும் பிற சிவத்தலங்களை பற்றிய அரிய தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும.

இந்து சமயம் பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களைப்  பிரதானமாகப போற்றுகின்றது.இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திற்கு,  சிவபெருமான் முதன்மையான கடவுளாக விளங்குகின்றார். சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்,இவரை பரமசிவன் என அழைக்கின்றனர்.சிவபெருமான் உருவம்,அருவம்(உருவம் இல்லாத நிலை), அருவுருவம்(உருவமும் அருவமும் கலந்த நிலை)  என மூன்று வடிவங்களில் உள்ளார். பொதுவாக சிவ பெருமான் கோயில்களில் அருவுருவமாக, சிவலிங்கத்தின் வடிவத்தில் வணங்கப்படுகிறார்.  சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் பல கோயில்கள் இருக்கின்றன. சிவ பக்தர்கள் பலர் (நாயன்மார்கள்) சிவபெருமானின் பெருமைகளைப் பாடிய பாடல்களின் தொகுப்பே 12 திருமுறைகளாக சைவசமயத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் முதல் மூன்று  திருமுறைகளை திருஞானசம்பந்தரும்,அடுத்த  மூன்று  திருமுறைகளை அப்பரும், ஏழாம் திருமுறையை சுந்தரரும்  பாடியிருக்கிறார்கள்.இந்த மூன்று நாயன்மார்களும் சிவத்தலங்களுக்கு சென்று பாடிய பாடல்கள் தேவாரப் பாடல்கள் எனவும்,இவர்களின் பாடல் பெற்ற தலங்கள் தேவாரத் திருத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.தேவாரத் திருத்தலங்களின்  எண்ணிக்கை மொத்தம் 276 ஆகும்.

சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும்,தேவாரத் திருத்தலங்கள்   மற்றும் பிற சிவத்தலங்களை பற்றிய அரிய தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும.