சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாலான அபூர்வ வெள்ளை நிற நந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள்.

பொதுவாக சிவன் கோவில்களில், கருங்கல்லாலான கருப்பு நிற நந்தியைத் தான் நாம் தரிசித்து இருப்போம். ஒரு சில கோவில்களில் தான் வெள்ளை நிறத்திலான, சுதையாலான நந்தியை நாம் பார்க்க முடியும். இக்கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மிகப் பெரிய வெள்ளை நிற நந்தியை நாம் காணலாம். இந்த நந்தியானது 13 அடி உயரமும், 21 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி வெள்ளை நிற சுண்ணாம்பு, சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்திகளில், இந்த நந்தியும் ஒன்றாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. நவக்கிரகங்கள் மேற்கூரையில்  இருக்கும் வித்தியாசமான அமைப்பு (16.11.2024) 

https://www.alayathuligal.com/blog/suchindrum16112024

2. சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்! (17.12.2023)

https://www.alayathuligal.com/blog/zhbmbgfm2yzb25zs7ckzhteepsc5lk-792yt?rq

3. பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர் (05.09.2021)

https://www.alayathuligal.com/blog/zhbmbgfm2yzb25zs7ckzhteepsc5lk

 
Previous
Previous

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

Next
Next

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்