மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்
சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தாண்டவமாடும் அபூர்வ கோலம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் வித்யூஜோதிநாயகி.
பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசனம் தரும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி
இத்தலத்தில் சிவபெருமான் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் பெயரோடு, நந்தி மீது நடமாடும் அபூர்வ கோலத்தில், 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்குப் பதிலாக, இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்குப் பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை (07.10.2022)
https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk
2. சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி (27.08.2022)
https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59
3. இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் (07.09.2022)
https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe
4. சிவபெருமான் ஒவ்வொருநாளும் நவக்கிரகங்களுக்குரிய வஸ்திரம் அணியும் தேவாரத் தலம் (14.10.2022)
https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk-skaly?rq