வில்வவனேசுவரர் கோவில்

பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோலம்.

கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர்.

இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.

பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரபாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் துவார பாலகர்களாக நிற்பது வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.

வீணையுடன் தட்சணாமூர்த்தி

பெருமாள், பிரம்மாவிற்கு அருகில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 4 அடி உயர தட்சணாமூர்த்தி நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார். இப்படி வீணை ஏந்திய தட்சணாமூர்த்தியை வேறு எங்கும் காண முடியாது.

துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இதுவும் ஒரு அபூர்வ அமைப்பாகும். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

பக்தர்களின் குறைகளுக்கு உடனே தீர்வு கூறும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/sx78gkp54nvyq2htojcccvsmyfamu5

 கலை அம்சத்துடன் காட்சி தரும் சண்முகர்

https://www.alayathuligal.com/blog/5dr6kjjx46w98af5bt7myn5l2ghpdm

மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/yy968pxh3tn5cne3bl34ktdjgecw7e


வீணையுடன் தட்சணாமூர்த்தி

துவாரபாலகர்களாக பிரம்மாவும், மகாவிஷ்ணுவும்

 
Previous
Previous

ஓதிமலை ஆண்டவர் கோவில்

Next
Next

ரங்கநாத பெருமாள் கோவில்