ஆரண்யேசுரர் கோயில்
நண்டு விநாயகர்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோயில். இறைவன் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவி திருநாமம் அகிலாண்ட நாயகி.
இத்தலத்திலுள்ள நண்டு விநாயகர் மிகவும் விசேஷமானவர். கந்தர்வன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு விமோசனம் பெற, நண்டு வடிவம் எடுத்து இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூஷிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூஷிக வாகனம் இல்லை.
கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்
https://www.alayathuligal.com/blog/pfxejz5ezmglhak5n2pbfrxb6pll9a