கச்சேரி விநாயகர் கோயில்
கச்சேரி விநாயகர்
மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில், இவருக்கு சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர் அபிஷேகமும், தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.