திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெருமாள் சிவலிங்கத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் தலம்

108 திவ்ய தேசங்களில், 106 திவ்ய தேசங்கள் மட்டும் பூமியில் உள்ளன.107–வது திவ்ய தேசம் திருப்பாற்கடல்.108–வது திவ்ய தேசம் வைகுண்டம் ஆகும். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்திப்பெற்றது. சிவலிங்கத்தின் ஆவுடையாருக்கு மேலே பிரசன்ன பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத தலம் இது. இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது, அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த கோவிலை தரிசித்தால், திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிடைப்பதாகவும், பாவங்கள் அனைத்தும் விலகுவதாகவும் தலபுராணம் கூறுகிறது.

Oct 22 thirupparkadal.gif
 
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

வாலீஸ்வரர் கோவில்