தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம் (03.01.2025)
https://www.alayathuligal.com/blog/thinnakonam03jan25
2. தென் கேதார்நாத் என்று போற்றப்படும் தலம் (28.10.2024)
வேதங்கள், நான்கு தூண்களாக இறைவனின் அருகில் இருக்கும் அபூர்வ அமைப்பு
தகவல், படங்கள் உதவி : திரு. சோ. ராமராஜ் குருக்கள், ஆலய தலைமை அர்ச்சகர்