திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும். திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழே, நான்கு சீடர்களுடன் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், ஆறு சீடர்களுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.. மேலும் கல்லால மரமும் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 

1. ஒட்டிய வயிறுடன் காட்சி தரும் விநாயகர் (25.06.2024)

  https://www.alayathuligal.com/blog/kdeat5l2c4n96ezw7werr2fxz5mclb-bwj6j?rq

 

2. முருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் ஏந்தியிருக்கும் அபூர்வ கோலம் (29.05.2022)

  https://www.alayathuligal.com/blog/kdeat5l2c4n96ezw7werr2fxz5mclb?rq

நமது சுதந்திர தினத்தையொட்டி வெளியான முந்தைய பதிவு

நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம் (15.08.2023)

https://www.alayathuligal.com/blog/jsydhrngc4wn9glt7yrmtlpyf6yr92?rq

 
Previous
Previous

நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்

Next
Next

முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்