திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
கோவில் விமானத்தில் 27 நட்சத்திரங்கள் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. இக்கோவில் மூலத்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம். எனவே தாங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இக்கோவிலில் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமானின் பெயர் வில்வ நாதேஸ்வரர் என்பதால் இங்கு வில்வம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதை உட்கொண்டால் மந்த புத்தி நீங்கும் . அத்துடன் ஞானமும் கிடைக்கும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
https://www.alayathuligal.com/blog/k3mwd3nrd7f2agry8c64g2he395n6m