கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேசங்கள்
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஆனால் திவ்ய தேசமான கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. ஏனென்றால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. ஏனென்றால் இத்தலத்து மூலவர் சாரங்கபாணி, இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளினார். இத்தலத்து தாயாரான மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை, பெருமாள் நேராக வைகுண்டத்திலிருந்து இந்த கோவிலுக்கு வந்து எழுந்தருளி, திருமணம் புரிந்து கொண்டார். எனவே இவரை வணங்கினாலேயே பரமபதம் கிடைத்து விடும் என்பதால், இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
இக்கோவிலில் மூலவரை தரிசிக்கும் வழியில், உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. உத்திராயண வாசல் வழியே தை மாதம் முதல் ஆனி மாதம் வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களை கடந்து சென்று பெருமாளை தரிசித்தாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.
இதேபோல் திருச்சிக்கு அருகே உள்ள மற்றொரு திவ்ய தேசமான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கும் உத்திராயண வாசல், தட்சிணாயண வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வெளியான முந்தைய பதிவுகள்
1.ஸ்ரீரங்கம் உற்சவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்படக் காரணமான சுவையான சம்பவம்(13.01.2022)
https://www.alayathuligal.com/blog/pacfgncma3mebb7dt968s5j7cwkg44
2.வட ஸ்ரீரங்கம் என்று போற்றப்படும் தேவதானம் ரங்கநாதர் கோவில்(02.01.2023)
https://www.alayathuligal.com/blog/pjdehi9w179q659uk9r833mtozm0k9