Latest Update: ஆலயத்துளிகள் இணையதளத்தின் முந்தைய பதிவுகளின் காப்பகம் (Archive) இந்தப் பக்கத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. அதிலுள்ள மாத லிங்கை கிளிக் செய்தால், அந்த மாதத்தின் முந்தைய பதிவுகளை படிக்கலாம்.
Update on Jan 4, 2024 : ஒவ்வொரு பதிவிலும் வரைபடத்திற்கு கீழ், தெய்வத்தின் பெயர், தேவாரத்தலம், திவ்யதேசம், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர் போன்ற குறிசொற்கள்(tags) இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட ஒரு குறி சொல்லை கிளிக் செய்தால் அந்த குறிசொல் (tag) சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் (blogs) காண முடியும். உதாரணத்திற்கு, தெய்வத்தின் பெயரையோ, ஊர் பெயரையோ அல்லது மாவட்டத்தின் பெயரையோ கிளிக் செய்தால், அந்தப் பெயரோடு இணைந்த அனைத்துப் பதிவுகளையும் ஒருசேர காண முடியும். ஆன்மீக சுற்றுலா திட்டமிடுவதற்கு இது பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
சிறப்புத் தகவல்
விநாயகர்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்று கின்றேனே.
-திருமூலர்
முருகன்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
- அருணகிரிநாதர்
சிவபெருமான்
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும். பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
-திருநாவுக்கரசர்
அம்மன்
பெருமாள்
பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே.
- தொண்டரடிப் பொடியாழ்வார்
Testimonial:
——————————————————————————————————————————————————————————————————————————————————————————————
R. Gunasekaran
May be this story known to many Rama devotees, but this is in captured art of sculpture may not be known to many of us like me Thank you sir 🙏
7/Jul/2024 Wishes:
Bhavani
Congratulations to Mr.Sukumar and
Mrs.Pallavi for stepping into 4 th year
🙏🙏💐
.May all the Gods shower their blessings on you both for your excellent service to the devotees.
K. Mukundan.
Excellent Hanuman Salisa.
First time I watched. Super.
My best wishes to enter the 4th yearAalayathuligal.
7/Jul/2023 Wishes:
Bhavani :
ஓம் சக்தி ஸ்ரீ வராகி அம்மன்
தாயே போற்றி போற்றி
ஸ்ரீ வராகி தாயின் திருவடிகள் சரணம் 🙏🌹
மிக தெளிவான விளக்கம்.
அருமையான பதிவு. நன்றி.
அம்மன் அலங்காரம் பார்க்க பார்க்க பரவசம்.
Congratulations. Best wishes for the more and more postings to come.
Rani Radhakrishnan : 🙏🙏👌 Congratulations . Wishing you to achieve more and more progress in your service.
Mani: மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் ஆலய துளிகள் மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
Ravitha Naveen : Awesome! Nice info. Congratulations to Mama and Pallavi Mam on completing a successful 3 yrs in this new venture. What an incredible achievement!! Both of your tireless efforts and dedication in sharing amazing facts to all of us is commendable. Kudos to both of you and wishing many more successful years in this blogging space!! 🙏🙏
Sivaraj S: மனமுருகி வேண்டினாலும் கடும் தவமிருந்து தேடினாலும் தென்படா பல வடிவான இறைவனை அவன் ஆலயத்தின் அழகுடன் வலைத்தளத்தில் எங்கிருந்தும் காணச் செய்து ஆன்மீகத் துளிகளால் ஆண்டுகள் மூன்று கடந்தும் பக்தி மழை பொழியும் நாட்கள் தடையின்றி மேன்மேலும் தொடர வேண்டுவமே.
——————————————————————————————————————————————————————————————————————————————————————————————
Sivaraj: “துளித்துளியாய் தோன்றிய ஆலயத் துளிகள்
ஐந்து நூறு பதிவுகள் கடந்து
ஆன்மீகக் கடலாய் அடியார் மகிழ
இறைவன் புகழும் தலவரலாறும் விளக்கி செய்
தொண்டு ஆலாய்
விரிந்து தொடர வேண்டுவனே”
Manibala: “இந்த தகவல் மிகவும் அருமையானது பயனுள்ளது ஆலயத் துளிகள் இணையதளத்தில் இதைப்போன்று நாகப்பட்டினத்தில் உள்ள சிம்மவாகன சம்கார பைரவர் பற்றி வந்தது அதனை பார்த்து சென்னையிலிருந்து 5 பேர் வந்து சிம்ம வாகன பைரவர் தரிசனம் செய்தார்கள் இவர்களின் சேவை மிகவும் மகத்தானது வாழ்த்துக்கள்”
Sundar: “I am an ardent follower of Alayathuligal since April last.As I have visited some of the temples in the blog the brief info take me back to those temples and create a sense of freshness besides kindling positive vibes. Small drops of info open up ocean of divinity in me.Thank you so much for your posts on Alayathuligal daily”.
Hemanth: “ஆலயத்துளிகளில் வெளியிடப்படும் தகவல்கள் பல மிக சுவாரசியமாகவும், எனக்குத் தெரியாததாகவும் இருக்கின்றன.இதில் படித்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. தொடர்ந்து இது போன்ற பல சுவையான மற்றும் அரிய ஆலயத் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி”
N.Nandagopalan “We are deeply blessed to know the valuable information and see all unique and divine poses of God's and goddesses at one temple. Thank you Alayathuligal team for sharing such wonderful information..We wish you to continue this divine service for many more years to come.”
V.Chandrasekar “மிக்க நன்றி. உலா வரும் இறைவன் உறையும் கோவில்கள் தல செய்திகள் என்னை போன்ற ஆன்மீக நண்பர்களுக்கு உங்கள் பதிவு வரம் தான். நன்றிகள்.”
Archive / காப்பகம்
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
எழுந்து நிற்க தயாராகும் நிலையில் காட்சி தரும் நந்தி
முதுகில் தழும்புள்ள, உயிரோட்டமுள்ள நந்தி
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப் பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம் சிவசைலநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இருக்கும் நந்தி மிகவும் அழகான, உயிரோட்டமுள்ள ஒரு சிலையாகும். இந்த நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது, அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
ஒரு சமயம், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக, சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன், தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து, நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும், சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி, சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று எழ, மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த, நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியதாம். இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருப்பதையும் நாம் காணலாம். உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும், இந்த நந்தியின் மீது நாம் பார்க்க முடியும். இந்த நந்தி தற்போதும் எழுந்திருக்க தயாராகும் கோலத்திலேயே அற்புதமாக காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும், அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும், அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. இந்த நந்தி சிற்பத்தின் கலை அம்சம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் மணிவிழாக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.