வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்

கருங்கல்லான அபூர்வ நடராஜர், சிவகாமி அம்மன் விக்ரகங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. ஆடுதுறை பெருமாள் கோயில் என்றும் கபிஸ்தலம் என்றும், இந்த தலம் அழைக்கப் படுகின்றது. இறைவன் திருநாமங்கள் தயாநிதீசுவரர், அழகு சடைமுடி நாதர், வாலி நாதர், சிட்டிலிங்க நாதர், குலை வணங்கீசர். இறைவியின் திருநாமங்கள் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடி அம்மை.

பொதுவாக சிவாலயங்களில், பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளை நாம் தரிசிக்க முடியும். ஆனால் இக்கோவிலில், சற்று வித்தியாசமாக கருங்கல்லான நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளன. மேலும் இவர்கள் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை  

அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால் (25.03.2022)

https://www.alayathuligal.com/blog/5bmtmtd79a95c49l3xn9y8ny2jc49e?rq

2. கர்ப்பிணிப் பெண் உயிரை காப்பாற்றிய சிவபெருமான் (24.03.2022)

https://www.alayathuligal.com/blog/gz89xrp7nr48kwhaws5lfesm7pf75e

 
Previous
Previous

நரிக்குடி எமனேஸ்வரர் கோவில்

Next
Next

நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்