நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
பட்டத்து யானைக்கு மீண்டும் கண்பார்வை அளித்த நஞ்சுண்டேஸ்வரர்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 23 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தலம் நஞ்சன்கூடு. இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.
ஒரு சமயம், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிற்கு மிகவும் பிரியமான பட்டத்து யானைக்கு திடீரென கண் பார்வை பறி போனது. அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடக்கும் பூஜைகளில், நாற்பத்தி எட்டு நாட்கள் கலந்து கொள்ள தனது பட்டத்து யானையை அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான். நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடைந்த போது, யானைக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான், மரகத லிங்கம் ஒன்றை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். மரகத ஆரம் ஒன்றையும் காணிக்கையாகக் கொடுத்தார். இந்த சிவலிங்கம், ஹக்கீம் நஞ்சுண்டா என்று பெயரால் அழைக்கப்படுகிறது.
இக்கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/xjepmtkh627a2nzzrz7arjhj4cr2bh?rq