பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
மார்கழி திருவாதிரையன்று சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு திரும்பும் அம்பிகை
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.
பொதுவாக சிவலிங்க சொருபத்தில், பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
எல்லா சிவாலயங்களிலும், நடராஜர் தாண்டவமாடும் நிலையில்தான் நமக்கு காட்சி தருவார். ஆனால், தாண்டவமாடி முடியப்போகும் நிலையில், இக்கோவிலில் நடராஜர் தரிசனம் தருகிறார். மேலும், இந்த கோவிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலைநயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்துள்ளது.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஒரு சில, பெருமாள் எழுந்தருளி உள்ள சிவாலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பது உண்டு. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கின்றது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று போன்ற விசேட தினங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். அவர்கள் கோவிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
அசுவினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஞானபைரவர்(19.12.2023)
https://www.alayathuligal.com/blog/zkxpryzfyx57652kx8e3twlkkkcdhn
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வெளியான முந்தைய பதிவுகள்
1. ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்(07.01.2023)
https://www.alayathuligal.com/blog/wx25768fr2h8c7e99mkzftzfxgfe5m
இப்பதிவில் நடராஜர், காவிரி ஆற்றில் படகில் பவனி வரும் காணொளி காட்சி இணைக்கப்பட்டுள்ளது. காணத்தவறாதீர்கள்!
2. நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம் (06.01.2023)
https://www.alayathuligal.com/blog/p837mcngfmpzwg799njawad37y7fk4
3. பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்(05.01.2023)
https://www.alayathuligal.com/blog/slp422xzxy9ez9xkaj7sa4yrgdcyn5