சங்காரண்யேசுவரர் கோயில்
சங்கு போன்ற உருண்டை வடிவிலான சிவலிங்கம்
தேவாரப்பாடல் பெற்ற தலைச்சங்காடு என்னும் தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் சங்காரண்யேஸ்வரர். தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் இங்கு சிவபெருமான் சங்கு போன்ற உருண்டையான வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார். மூலவர் சங்காரண்யேஸ்வரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்