திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்

ராகு-கேது இணைந்து ஒரே வடிவாக காட்சி தரும் அபூர்வ தோற்றம்

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.

ராகு பகவான் மனித தலையும்,பாம்பு உடலும் கொண்டவர். கேது பகவான் பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர். திருவாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில், பாம்பு உடலாகவும் மனித முகமாகவும், ஓரே நிலையில் காட்சி தருகின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அவருக்கு 'காலசர்ப்ப தோஷம்' என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியம் தலம் என்பது ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்திற்கு அதிகம் அறியப்படாத பரிகார தலமாகும். .

இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்

https://www.alayathuligal.com/blog/d3kkjkrm768e9m6d4sbfws75pha8p9?rq

2. அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ பைரவர்

https://www.alayathuligal.com/blog/er6z393mf3wjcxwejmgcy5a522gbl7

சென்ற ஆண்டு 'திருவாரூர் ஆழித்தேரோட்டம்' பற்றி வெளியான பதிவு

உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்

https://www.alayathuligal.com/blog/8pmnbydmwj85bhe5kgpw7lyjyx5rpm?rq

ஒரே வடிவாக இணைந்து காட்சி தரும் ராகு-கேது

படம் உதவி: திரு. ராஜராஜ குருக்கள், திருவாஞ்சியம்

 
Previous
Previous

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

Next
Next

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்