மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

அம்பிகைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

இத்தலத்து இறைவி பெரிய நாயகி மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள். அம்பிகை, இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கு செய்யப்படும் இந்த அலங்காரம், தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம் (11.02.2023)

மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம்

https://www.alayathuligal.com/blog/cfr97wz7x2pmyta7w2l5wl5ceakpnp

மாசி மகத்தை பற்றி வெளியான முந்தைய பதிவு

மாசி மகத்தின் சிறப்புகள் (06.03.2023)

https://www.alayathuligal.com/blog/cxjpwx9986zg4wbezr3bl4sebd2pw7?rq

 
Previous
Previous

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்

Next
Next

ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்