கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமானை கிளி வடிவில் தன் இடது தோளில் ஏந்தி இருக்கும் அம்பிகை
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். அம்பிகையின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலமாக, இக்கோவில் விளங்குகின்றது.
மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இந்தக் கிளிக்கு வேதாமிர்த கீரம் என்று பெயர். அம்பிகை மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேதசக்தியாகக் கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
முருகன் பிறக்க காரணமான தலம்
https://www.alayathuligal.com/blog/8psge9m2ec72fl29rd9aj2t2kllgmb