ஆயிரத்தெண் விநாயகர் கோவில்

புரோகிதராக வந்த விநாயகர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊரிலிருந்து 7 கி.மீ., தொலைவிலுள்ள ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் என்றழைக்கப்படுகிறார். சுமார் 2000 வருஷத்திற்கு முன்னர் சோமார வல்லபன் என்று ஒரு ராஜா இங்கு ஆண்டுகொண்டிருந்தான். 1008 புரோகிதர்களை நர்மதா நதிக்கரையிலிருந்து வரவழைத்து, ஒரு பெரிய யாகம் நடத்த ஏற்பாடு செய்தான் . 1007 புரோகிதர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு புரோகிதர் வராததால் யாகத்தைத் துவங்க முடியாமல் வருந்தி நின்றான் மன்னன். எடுத்த காரியத்தை விக்னமின்றி முடிக்க உதவும் விக்னேஸ்வரனை மனம் உருக வேண்டினான். அரசனின் ஆசை நிறைவேற, விநாயகப் பெருமானே 1008-வது புரோகிதராக வந்து, யாகத்தையும் அன்னதானத்தையும் பூர்த்தி செய்தார். இதன் காரணமாக இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.
விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. சித்திரை பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளன்று தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

 
Previous
Previous

பாலீஸ்வரர் கோவில்

Next
Next

அர்த்தநாரீஸ்வரர் கோவில்