கற்பக விநாயகா் கோவில்
விநாயகப் பெருமானின் ஐந்தாவது படைவீடு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
விநாயகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி. .காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு அவர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும்.
இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பக விநாயகா் 6 அடி உயரத்தில் காணப்படுகிறார்.இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். இவ்விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், இவர் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும்.
இங்கு 3 சிவலிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 அம்பிக்கைகள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
இத்தலத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவே பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகப் பெருமானின் ஆறாவது படைவீடான திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் பற்றிய முந்தைய பதிவு
பக்தனுக்காக நைவேத்தியத்தை சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார்
https://www.alayathuligal.com/blog/et8k7wat6pg7cm9764clslk77hyd6m