ஞானமலை முருகன் கோவில்
முருகனின் திருவடி பதிந்த திருப்புகழ் தலம்
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், சோளிங்கரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
கோவில் கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி காட்சி அளிக்கிறார். ஒருமுகம், நான்கு கரங்கள், பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை, முன்வலக்கரத்தில் அபயமுத்திரை, முன் இடக்கரம் இடுப்பில் வைத்து, முருகப்பெருமான் நின்ற கோலத்தில், 'பிரும்மசாஸ்தா' வடிவத்தில்' காட்சி அளிக்கிறார். வள்ளியை மணந்துகொண்டு முருகப்பெருமான் இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் வள்ளியோடு உலாவினார். இம்மலையில் முருகப்பெருமானின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடம் உள்ளது.'ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம்.
அருணகிரிநாதருக்கு முருகனின் திருவடி தரிசனம் கிடைத்த ஞானமலை
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்தபோது முருகப்பெருமான் தனது திருவடிகளை அவருக்கு காட்சி தந்து ஆட்கொண்டான். முருகனின் திருவடியை மறுபடியும் தரிசிக்க வேண்டிய அருணகிரிநாதருக்கு, மீண்டும் ஞானமலையில் அவருக்கு திருவடி தரிசனம் தந்து அருளினான். கோவில் தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்' வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவமாகும். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் அரிய வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக்காட்சியைக் கண்டு இன்புறுவார்.
ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று முருகன் தலங்கள்
ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கன் மலையும் அமைந்துள்ளன. வள்ளிமலை, தணிகைமலை, ஞானமலை, மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மூன்று மலைகளையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்
மயிலில் அமர்ந்த முருகனின் மடியில் வள்ளி
முருகனின் திருவடி
முருகனின் திருவடி
முருகனின் திருவடி