காரண விநாயகர் கோவில்
கருவறையில் விநாயகரும் நந்தியும் சேர்ந்து காட்சி தரும் தலம்
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தம் பாளையத்தில் அமைந்துள்ளது காரண விநாயகர் கோவில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் நந்தி இருப்பது ஒரு அரிதான காட்சியாகும். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.