தலத்தின் தனிச்சிறப்பு
பிரசித்தி பெற்ற கோவில் பிரசாதங்கள்
கோவில் பிரசாதங்களில் திருப்பதி லட்டும் பழனி பஞ்சாமிர்தமும் மிகவும் பிரசித்தம்.அது போல பிரசித்தி பெற்ற, மற்ற கோவில் பிரசாதங்கள்,
ஸ்ரீரங்கம் கோவில் - அக்காரவடிசல், சீரா அன்னம்
காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் - குடலை இட்லி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் - திருக்கண்ணமுது
அழகர் கோவில் - தோசை
ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை
திருப்புல்லாணி - பாயாசம்
திருக்கண்ணபுரம் - முனையதரையன் பொங்கல்
குருவாயூர் - பால் பாயசம்
திருச்சி கோயிலடி - அப்பம்
சிதம்பரம் - களி, சம்பா சாதம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் - நெய் முறுக்கு
மீனாட்சியம்மன் கோவில் - ஞானப்பால், சுண்டல்
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் - சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம்
வைத்தீஸ்வரன் கோவில் - தினை மாவு
திருச்செந்தூர் - அரிசிப்புட்டு