வெயிலுகந்த விநாயகர் கோவில்

சூரியன் வழிபட்ட விநாயகர்

இக்கோவில் மூலவர் விநாயகர் மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படுவதால் இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் முதலில் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கித்தான் சென்றார். உப்பூர், தொண்டியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 29 கிமீ தொலைவில் உள்ளது .

 
Previous
Previous

ரங்கநாதர் கோவில்

Next
Next

சுப்பிரமணிய சுவாமி கோவில்