சென்னை முகப்பேர் மார்க்கண்டேசுவரர் கோவில்

மகாலட்சுமி வழிபட்ட தலம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும்வழியில் உள்ள முகப்பேர் பகுதியில் அமைந்துள்ளது மார்க்கண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதவல்லி, சந்தான கௌரி. மகாலட்சுமி உள்பட சப்த மகரிஷிகள் வழிபட்ட தலம் இது.

அம்பாள் வரதஹஸ்த நாயகியாக, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவ்வன்னையை ஐந்து திங்கள் கிழமை, ஐந்து தீபங்கள் வீதம் ஏற்றி வழிபடத் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 11 அல்லது 21 எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலை கோத்து அணிவித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி, மகப்பேறு வாய்க்கிறது. கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று, காலையில் உணவருந்தாமல் தம்பதியாக வந்து வழிபடத் தொடங்கி, பின்னர் ஐந்து வெள்ளிக்கிழமை இவ்விதம் வழிபட்டால் சத் புத்திர பாக்கியம் ஏற்படுகிறது. குழந்தை வரம் அருளுவதால், இத்தலத்து இறைவனுக்கு மகப்பேறீசுவரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பௌர்ணமி தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை

திருக்கடையூருக்கு இணையானது இத்தலம். எனவே, இங்கு ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுள் நீட்டிப்புப் பெறலாம் என்பது ஐதிகம். மேலும், சஷ்டியப்தப் பூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகமும் செய்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலம் கொண்டுள்ள சித்திர குப்தரை, கேதுவுக்கு ப்ரீதியாக கொள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சித்திர குப்தரை வழிபடுவதற்கு பௌர்ணமி உகந்த நாள். அன்று வணங்கினால், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திருதியை முன்னிட்டு வெளியான முந்தைய பதிவுகள்

 

1. அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம் (23.04.2024)

  https://www.alayathuligal.com/blog/hwnjzw7gkbdl8h5wh7md5j4zctml87?rq

 2. அட்சய திருதியைக்கு உரிய   தனிச்சிறப்புத் தலம் (22.04.2023)

   https://www.alayathuligal.com/blog/kx236pejz4sk75kjxdtwxc33xm43pg?rq

மார்க்கண்டேசுவரர்

மகாலட்சுமி

சித்திர குப்தர்

 
Previous
Previous

தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்

Next
Next

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்