ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தைலச் சக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு செய்யப்படும் தைல அபிஷேகம் மிகவும் விசேஷம். இந்தத் தைலமானது மிகுந்த நறுமணம் உடையது. பக்தர்கள் இந்தத் தைலத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாளின் மார்கழி மாத எண்ணெய் காப்பிற்கு, 61 மூலிகைகள் சேர்ந்த, 40 நாட்கள் தாய்ச்சப்பட்ட தைலம் பயன்படுத்தப்படுகிறது். இளநீர், பால், நல்லெண்ணெய், தாழம்பூ, நெல்லிக்காய் முதலான பல பொருட்களைச் சேர்த்து ஏழு படி எண்ணெய் விட்டு அதை இரண்டு பேர் 40 நாட்்கள் காய்ச்சுவார்கள். அதிலிருந்து நாலு படி தைலம் கிடைக்கும். .மார்கழி மாதம் நடைபெறும் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலம் சாற்றப்படுகிறது்
ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்ய தைலம் எடுத்தது போக, மீதமுள்ள தைல மூலப் பொட்களின் சக்கையை பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். அந்த தைலச் சக்கையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயோடு கலந்து தலைக்குப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு, 'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தைலச் சக்கை' என்று பெயர். இதனை தலையில் தேய்ப்பதால் கண் எரிச்சல், தலை வலி போன்ற நாட்பட்ட வியாதிகள் குணமாவதுடன், தலை முடியும் மிகுந்த வாசனையாகவும் இருக்கும்.