௳ (முகப்பு)

View Original

அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்

கா்ண குண்டலம் அணிந்த ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழைய சீவரம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு 'திருமுக்கூடல்' என்ற பெயரும் உண்டு. இத்தலத்து பெருமாள் திருநாமம் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். இக்கோயில் பெருமாள், திருமலை பெருமாளுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.

இத்தலத்தில் வீர ஆஞ்சநேயருக்குத் தனி சந்நதி அமைந்துள்ளது. வீர ஆஞ்சநேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார். அவர் 'கா்ண குண்டலம்' அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார். ஆஞ்சநேயரின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வித்தியாசமான தேன்குழல் மாலை

பொதுவாக ஆஞ்சநேயருக்கு வடை மாலைதான் சாத்துவார்கள். ஆனால் இத்தலத்து வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.

பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக்கூடல் பெருமாளையும், வீர ஆஞ்சநேயரையும் பக்தியோடு வழிபடுகின்றனா்.

See this map in the original post