௳ (முகப்பு)

View Original

குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்

ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் அபூர்வ விநாயகர்

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.

சிவாலயத்தில், சிவலிங்கத் திருமேனியின் கீழ் பாகமான ஆவுடையார், சக்தியின் அம்சமாக இருக்கின்றது. இங்குள்ள விநாயகர், தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இப்படி ஆவுடையார் மேல் அமர்ந்திருக்கும் விநாயகரை காண்பது அரிது.

இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன், இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு (17.02.2024)

எமனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம்

சனி தோஷ நிவர்த்தி தலம்

https://www.alayathuligal.com/blog/xc3nb6phjyayd6c4ccbe3cc2hbzpz6?rq

ஆவுடையார் மேல் விநாயகர் எழுந்தருளி இருக்கும்  மற்றொரு தலத்தை பற்றிய முந்தைய பதிவு

நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோவில்

ஆவுடையாரின் மேல் வீற்றிருக்கும் அபூர்வ விநாயகர் (07.07.2023)

https://www.alayathuligal.com/blog/zdzp2wmp9557zfa43xtan4f3yhb5ap?rq

See this map in the original post