விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்
நாகத்துடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோவில். இறைவன் திருநாமம் சிவந்தியப்பர். இறைவியின் திருநாமம் வழியடிமை கொண்டநாயகி.
பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இப்படி நாகத்துடன் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவு
வள்ளியும் தெய்வயானையும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் வித்தியாசமான அமைப்பு (23.09.2024)