உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
விஷக்கடியை குணப்படுத்தும் விஷ ராஜா
நாகத்தை வாயில் கடித்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
காளத்தீஸ்வரர் கோவிலுக்கு வெளியில், நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத நாகராஜனின் அம்சமான விஷ ராஜா எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது வாயில் நாகத்தை கடித்தபடி காட்சி தருகிறார். விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பௌர்ணமியன்று இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அணிவித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் விஷக்கடிக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து குணமாகிறார்கள். இத்தலத்து விஷ ராஜாவை வழி பூஜை செய்து வழிபட்டவர்கள், எந்தவிதமான விஷக்கடிக்கும் உள்ளாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
காளிதேவியுடன் எழுந்தருளி இருக்கும் சப்த மாதர்கள்
பொதுவாக கோவில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்கள் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் அஷ்ட மாதர்களை (எட்டு அம்பிகையர்) நாம் தரிசிக்கலாம. ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றவர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள் இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது.
இக்கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு (17.08.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe-w4jnj
2. ஆற்றில் மூங்கில் கூடையில் மிதந்து வந்த அம்பிகை (02.08.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe-w4jnj
3. சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை (27.07.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe
4. ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான் (04.07.2024)
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf