திருமயிலாடி சுந்தரேசுவரர் கோவில்
பத்மாசனக் கோலத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சிதம்பரம் - சீர்காழி சாலையில் அமைந்துள்ள புத்தூர் எனும் சிற்றூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் திருமயிலாடி சுந்தரேசுவரர் கோயில். மயிலாடுதுறையில் மயிலாகப் பூஜித்த அம்பிகை இங்கே மயிலாக நடனமாடியதால் இந்தத் தலம், திருமயிலாடி என்று பெயர் பெற்றது. இந்தக் கோவிலின் விமானம் எண் கோணத்தில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையின் சுற்றுச்சுவரில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை முயலகன் மேல் வைத்தும் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தமிழகத்தில் எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத விதமாக இரண்டு கால்களையும் மடித்து, பத்மாசன திருக்கோலத்தில், யோக நிலையில் அருள் பாலிக்கிறார். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு யோக முறையை காட்டியதால், யோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
இவரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் திருமண தடை நீங்கும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு (12.112024)
முருகனின் பாதத்தின் கீழ் மயில் இருக்கும் அரிய காட்சி