சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
நவக்கிரகங்கள் மேற்கூரையில் இருக்கும் வித்தியாசமான அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரக மண்டபத்திற்குச் சென்றால், அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும். தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான், மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள நவக்கிரகங்களை நாம் தரிசிக்க முடியும்.
நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன. சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது, நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால், எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்க்கிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான அமைப்பை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்! (17.12.2023)
https://www.alayathuligal.com/blog/zhbmbgfm2yzb25zs7ckzhteepsc5lk-792yt?rq
2. பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர் (05.09.2021)
https://www.alayathuligal.com/blog/zhbmbgfm2yzb25zs7ckzhteepsc5lk