திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று திருச்செந்தூர் தலத்தில் வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நிகழ்ந்ததால், கந்த சஷ்டி திருவிழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல முருகத் தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடைபெறும்.சில தலங்களில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடைபெறும். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாள் முருகப்பெருமான்-தெய்வயானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் திருக்கல்யாணக் கோலத்தில் முருகப்பெருமானின் ஊஞ்சல் சேவை என இவ்விழா பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும்.
சுந்தசஷ்டி கொண்டாடுவதற்கான காரணங்கள்
சூரபத்மன் வரதம் தவிர்த்து சுந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்கள் இருப்பதாக மகாபாரதம்,சுக்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவக்கி ஆறு நாட்கள் நடத்தினர் யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
கந்தப்புராணத்தில், கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும், ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுக்கருளச் செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பதி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். உச்சி காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூறை முடிந்தவுடன், ஜெயந்திநாதர சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப்பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார்.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா முதல் நாளன்று வெளியான பதிவு
திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
https://www.alayathuligal.com/blog/f2mfw7jgfymnjwlsgtysg9y23rg436