முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
குதிரை முகத்துடன் காட்சி தரும் நந்தி
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, முறப்பநாடு கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.
தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஒன்பது கைலாய தலங்களில், இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'நடுக்கைலாயம்' என்கின்றனர். நவக்கிரகத்தில் குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய தலம் முறப்பநாடு ஆகும். இத்தலத்தில் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை எனப் பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம்.
இக்கோவிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். சிவபெருமான், அரசன் முன்பு தோன்றி தாமிரபரணியில் நீராடும்படி கூறினார். இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோவில் கட்டினான். மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
நவகைலாய தலங்களில் குரு தலம்
தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
https://www.alayathuligal.com/blog/fye8a5gh3t36r9c7jsjrgke5m4a9zw