௳ (முகப்பு)

View Original

பாடலீஸ்வரர் கோவில்

பார்வதி தேவி அரூபமாக தவம் செய்த இடம்

பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத் தலமான கடலூரில் அமைந்துள்ளது பாடலீஸ்வரர் கோவில். இத்தலத்தின் முற்காலத்திய பெயர் திருப்பாதிரிப்புலியூர். பாதிரியை தலவிருட்சமாக கொண்டதாலும் ,புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) வழிப்பட்டதாலும் (பாதிரி + புலியூர் ) இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது .

ஒருமுறை பார்வதி தேவி தன் திருக்கரங்களால் இறைவனின் கண்களை மூடினாள். இதனால் உலகம் இருண்டு அணைத்து இயக்கங்களும் நின்று போயின.இதனை கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் .இறைவன் தாயாரை பூலோகம் சென்று, அங்குள்ள சிவதலங்களில் பூஜிக்கும்படியும் அவ்வாறு பூஜை செய்யும் போது எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார் .அதுபோல் தாயார் பூலோகம் வந்து சிவத்தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்துவந்தார் . அப்போது பாதிரி வனமாக திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண் மற்றும் தோள் துடித்தது ,பார்வதி தேவி இத்தலத்திலேயே தங்கி அரூபமாக தவம் செய்த இடம், இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் 'அருந்தவநாயகி' சன்னதியாக உள்ளது . இச்சந்நதியில் விக்கிரகம் ஏதும் இருக்காது .பீடம் மட்டுமே இருக்கும்.

See this map in the original post