நாகநாதர் கோவில்
ராகு கிரக தோஷ பரிகார தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருப்பெயர நாகநாதர்.
இறைவி கிரிஜா குஜாம்பிகை. ஜாதகத்தில் ராகு கிரக தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
ராகு பகவான் சிவன் அருள் பெற்ற தலம்
பாம்பாக இருந்த ராகு பகவான் முனிவர் ஒருவரின் மகனை தீண்டியதால், அந்த முனிவரின் சாபம் பெற்று தன் சக்திகள் அனைத்தையும் இழந்தார். அதளால் ராகு பகவான், இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானின் அருள் பெற்று மீண்டும் தன் சக்தியை பெற்றார் . நாகத்தின் வடிவில் இருந்த ராகு பகவானிற்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவ பெருமான் 'நாகநாதர்' என அழைக்கப்படுகிறார்.
அபிஷேகத்தின போது பால் நீல நிறமாக மாறும் அதிசியம்
இக்கோவிலிள் இரண்டாவது பிரகாரத்தில் ராகு பகவான் தன் இரு மளைவியர்களான நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு பகவான் பிற கோவில்களில் மனித தலையும், நாக பாம்பின் உடலும் கொண்ட தோற்றத்தில்தான் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் ராகு பகவான் முழு மனிதனின் வடிவில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இக்கோவிலில் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.