௳ (முகப்பு)

View Original

பகவத் விநாயகர் கோயில்

நவக்கிரக விநாயகர்

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.