௳ (முகப்பு)

View Original

ஈச்சனாரி விநாயகர் கோவில்

தன் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்த விநாயகர்

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
இங்குள்ள மூலவர் சிலையை பேரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து கொண்டு வந்தனராம். வழியில் வண்டியின் அச்சு முறிந்து தற்போது கோவில் இருக்கும் இடத்தில் நின்று விட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் வண்டியை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. பின்னர் விநாயகர் இவ்விடத்திலேயே இருக்க விரும்புகிறார் என எண்ணி அங்கேயே கோவிலை நிர்மாணித்தனர். ஈச்சனாரி எனும் இடத்தில் வாசம் செய்வதால் ஈச்சனாரி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.
கோவையில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் தங்கள் வாகனங்களுக்கு முதல் பூஜை போடுவது இங்குதான் என்பது சிறப்பம்சமாகும.

See this map in the original post