கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்
கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்
கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால், பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால், அந்தப் பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதே போல புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் புண்ணியம் கோடி அளவு கூடிவிடும்.
விளையாட்டில் உன்னத நிலையை அடைய அருளும் அம்பிகை
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், அத்துறையில் உன்னத நிலையை அடையவும், பரிசுகள் பெறுவதற்காகவும் இந்த பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.