௳ (முகப்பு)

View Original

பாலீஸ்வரர் கோவில்

களவு போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும் கதவிற் கணபதி

பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில் கதவிற் கணபதி அருள்பாலிக்கின்றார். சுமார் ஒரு சாண் அளவே உள்ள மரத்தால் ஆன திருமேனி உடையவர். ஆனால் இவரின் கீர்த்தியோ பெரிது. மஹா மண்டபத்தில் தனி சன்னதியில் இருக்கும் இவரை வணங்கிட வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பல ஆண்டுகளுக்கு முன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக் கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.
பொருள் களவு கொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்து விட்டு அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்து விட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

See this map in the original post