௳ (முகப்பு)

View Original

திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான்

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை' (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும். அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன. இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும். ஆதியில் முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக, திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி , ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் நாம் தரிசித்திடலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

நடனமாடிய கோலத்தில் இருக்கும் வீணை தட்சிணாமூர்த்தி (17.08.2023)

https://www.alayathuligal.com/blog/93rnm536r2d3n9t8rylsmgzngdnsbt?rq

கோவில் கோபுரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் நந்தி, பலிபீடம்

See this map in the original post