௳ (முகப்பு)

View Original

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

பிரம்மதேவன் பெருமாளுக்கு நடத்திய திருமலை பிரம்மோற்சவம்

படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே 'பிரம்மோற்சவம்' ஆகும். திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால், வேத ஆகமங்களின் அடிப்படையில், அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, நடத்தப்படும் உற்சவம் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின்படி மற்ற திருவிழாக்களை விட இந்த பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வந்த பிரம்ம தேவர், பெருமாளுக்கு விழா எடுத்தார். இதுவே புகழ்பெற்ற பிரம்மோற்சவ விழாவாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கோவில்களை விட திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் தனித்துவமானது.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், 'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரம்மோற்சவத்தின் காலை மாலை இருவேளைகளிலும்,வெங்கடேசப் பெருமாள் தனது துணைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விதவிதமான வாகனங்களில் கோவிலைச் சுற்றி வலம் வருவார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திருமலையில் வந்து கூடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா திருவோண நாளில் நிறைவு பெறும்.

இந்த ஆண்டு திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, செப்டம்பர் 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விபரங்கள்

செப்டம்பர் 18 மாலை - த்வஜரோஹனம்

செப்டம்பர் 18 இரவு - பெரிய ஷேச வாகனம்

செப்டம்பர் 19 காலை - சின்ன ஷேச வாகனம்

செப்டம்பர் 19 இரவு - ஹம்ச வாகனம்

செப்டம்பர் 20 காலை - சிம்ம வாகனம்

செப்டம்பர் 20 இரவு - முத்துப்பந்தல் வாகனம்

செப்டம்பர் 21 காலை - கற்பக விருட்ச வாகனம்

செப்டம்பர் 21 இரவு - சர்வ பூபால வாகனம்

செப்டம்பர் 22 காலை - மோகினி அவதாரம்

செப்டம்பர் 22 இரவு - கருட வாகனம்

செப்டம்பர் 23 காலை - ஹனுமந்த வாகனம்

செப்டம்பர் 23 மாலை - தங்க ரத ஊர்வலம்

செப்டம்பர் 23 இரவு - கஜ வாகனம்

செப்டம்பர் 24 காலை - சூர்ய பிரபை வாகனம்

செப்டம்பர் 24 மாலை - சந்திர பிரபை வாகனம்

செப்டம்பர் 25 காலை - ரதோற்சவம்

செப்டம்பர் 25 மாலை - அஸ்வ வாகனம்

செப்டம்பர் 26 அதிகாலை - பல்லக்கு உற்சவம்

செப்டம்பர் 26 காலை - சக்ர ஸ்நானம்

செப்டம்பர் 26 மாலை - த்வஜ ஆவரோஹனம்

சென்ற ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் வெளியான பதிவுகள்

1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் (15.10.2022)

https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams

2. திருவேங்கடவனின் மாமனார் (8.10.2022)                                               

https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

3. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை (24.09.2022)

https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

 

பெரிய ஷேச வாகனம்

சின்ன ஷேச வாகனம்

முத்துப்பந்தல் வாகனம்

கற்பக விருட்ச வாகனம்

கருட வாகனம்

கருட சேவை (22.09.2023)

கருட சேவை (22.09.2023)

தங்க ரதோற்சவம்