௳ (முகப்பு)

View Original

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் தேவாரத்தலம்

கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி.

இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடு கோபுர வாயிலின் வழியாக சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மனை தரிசனம் செய்யலாம். நடுவாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் மூலவர் மகுடேசுவரரை தரிசிக்க முடியும். அகத்தியர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை காணலாம்.

பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காத அதிசய வன்னி மரம்

இந்தக் கோவிலில் இருக்கும் மற்றொரு சிறப்பு தல விருட்சமான வன்னி மரம் தான். இந்த வன்னி மரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக பிரம்மா அருள் புரிகிறார். இந்த வன்னிமரம் மிகவும் பழமையானது. இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்க்காது. மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும். மறுபக்கத்தில் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீரானது எத்தனை நாட்கள் ஆனாலும் கெடுவதில்லை. பழனியில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு இங்கு ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் தீர்த்தத்தில், இந்த வன்னி மரத்தின் இலையை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவிட்டம் நட்சத்திரத்திற்கான பரிகாரத் தலம்

பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

அவிட்ட நட்சத்திர பரிகாரத் தலம் பற்றிய முந்தைய பதிவு (19.3.2022)

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்

https://www.alayathuligal.com/blog/h4ew3e86maepf4kp66k67k3sd95eem?rq

அன்னாபிஷேகத்தில் மகுடேசுவரர்

வடிவுடை நாயகி

வீரநாராயணப் பெருமாள்

மூன்று முகம் கொண்ட பிரம்மா

பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காத அதிசய வன்னி மரம்

See this map in the original post