௳ (முகப்பு)

View Original

வியாழ சோமேஸ்வரர் கோவில்

முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தரும் தலம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. வியாழ சோமேஸ்வரர் கோவில். நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் 'வியாழ சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'சோமேஸ்வரர்' என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும்.

இத்தலத்து முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார் அவர் தொங்க விட்ட நிலையில் இருக்கும் காலில் பாதரட்சை அணிந்து இருக்கிறார். முருகப்பெருமானின் இத்தகைய கோலத்தை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத.

See this map in the original post