௳ (முகப்பு)

View Original

சென்னை திருக்காரணி காரணீஸ்வரர் கோவில்

சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அளிக்கும் சாம்பவி தீட்சை

சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது காரணீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. சென்னையில் உள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்றான இத்தலம் சுமார் 450 ஆண்டுகள் பழமையானது.

காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனைக் காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார். இதனை அறிந்த தேவேந்திரன் இந்தப் பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு நடைபெறும் ரிஷப வாகன சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.

சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு உற்சவம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அன்று தான் சிவ பெருமான் தமது வாகனமான ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வது பெரிய புண்ணியத்தைத் தரும். அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லோரும் கடைத்தேற இறைவனை அடைய குரு முக்கியம், அவ்வாறு குரு இல்ல்லாதாவர்களுக்கு வாகனமேறி சிவபெருமானும், பார்வதி தேவியும் வரும் போது எந்த தகுதியும் இல்லாதாவர்களுக்கும் அவர் தீட்சை அளிக்கின்றார். இதற்கு சாம்பவி தீட்சை என்று பெயர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வெள்ளி ரிஷப வாகன காட்சி பற்றிய முந்தைய பதிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி (01.04.2023)

https://www.alayathuligal.com/blog/g86afhe7flhwzhc65afmplw9a27xxc

See this map in the original post